ஜூன் 20 பொதுத் தேர்தலுக்கான சாத்தியம்? உச்சநீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி!

ஜூன் 20 பொதுத் தேர்தலுக்கான சாத்தியம்? உச்சநீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி!

தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் இன்று (02) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பு என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 10 நாட்களாக உச்சநீதிமன்ற ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post