1.5 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குமாறு , பௌத்த தேரருக்கு எதிராக அலிசப்ரி வழக்கு!

1.5 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குமாறு , பௌத்த தேரருக்கு எதிராக அலிசப்ரி வழக்கு!

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக வெறுப்புச் பேச்சுகள் நிகழ்த்திய, மெடில்ல பஞ்ஞாலோக தேரருக்கு கொழும்பு மாவட்ட நீதவான்  தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

தேரரின் செயற்பாடு தனக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக கூறி, அலி சப்ரி 150 இலட்சம் 1.5 கோடி ரூபாவை நஷ்டஈடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சமூக ஊடகம், அச்சு இலத்திரனியல் ஊடகங்களிலே வெறுப்புப் பேச்சுகளை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சுமத்தப்படுகின்றது என நீதவான் அறிவித்தார்.

-நவமணி

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post