சற்றுமுன் விண்ணில் பாய்ந்தது அமெரிக்க வீரர்களுடன் விண்கலம்! (வீடியோ இணைப்பு)

சற்றுமுன் விண்ணில் பாய்ந்தது அமெரிக்க வீரர்களுடன் விண்கலம்! (வீடியோ இணைப்பு)

NASA மற்றும் Space-X நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space) ஆரம்பமானது!

NASA மற்றும் Space-X நிறுவனங்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை ஃப்ளோரிடாவில் உள்ள அதன் Kennedy விண்வெளி மையத்திலிருந்து Space-X நிறுவனத்தின் Falcon 9 எனும் ஏவுகணையை சற்றுமுன் விண்ணில் செலுத்தியது.

ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஃபால்கன் 9 (Falcon 9) எனப்படும் ஏவுகணையின் மூலம் அந்நிறுவனத்தின் ட்ராகன் (Dragon) எனும் விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும்.

பின், அந்த விண்கலம் (Dragon) விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும், பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்து, அதனுடன் இணைந்தவுடன், அதில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண் பாப் பென்கென் (Bob Behnkan) மற்றும் டக் ஹர்லி (Doug Hurley) வெளி நிலையத்திற்குள் செல்வார்கள்.

ட்ராகன் விண்கலமானது, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் விண்வெளி வீரர்களின் பணி முடிந்தவுடன், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, அவர்களைச் சுமந்துகொண்டு பூமியை வந்தடையும்.

2011ஆம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்க விண்வெளிவீரர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து, அமெரிக்க ஏவுகணை மற்றும் விண்கலங்களில் இன்று சென்றிருக்கிறார்கள்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post