குழந்தைகளை தாக்கும் (Kawasaki) கவாசாகி நோய்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தைகளை தாக்கும் (Kawasaki) கவாசாகி நோய்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே அம்மையார் சிறுவர் Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்தேய நாடுகளில் தற்போது காணப்படுவதாக தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளையே இந்த நோய்பாதிக்கின்றது என்று தெரிவித்த அவர் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், பின்னர் நாக்கு சிவந்து Strawberry போன்று தோற்றமளித்தல், தோலில் ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள், தோல் உரிதல், உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல் அத்துடன் கழுத்தில் ஒரு வகை சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறிகளாகும் என்றார்.

இலங்கையில் பொதுவாக வருடத்தில் கவாசகி நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 50க்கும 100 க்கும் இடையில் காணப்படுகிநது இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து உலகில் குழந்தைகள் மத்தியில் இந்நோய் வேகமாக பரவும் தன்மை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

மனித உடலில் குருதியைக்கொண்டு செல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது. அதனால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம. இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளது. குறிப்பாக இந்த நோய் 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே பெரும்பாலும் பாதிக்கின்றது. எனவே இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்தியர் நிபுணரை நாட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.