மட்டக்களப்பு விபத்தில் ஊடகவியலாளர் பரிதாப பலி!

மட்டக்களப்பு விபத்தில் ஊடகவியலாளர் பரிதாப பலி!

Batticaloa Mithun Journalist
இன்று (13) மாலை மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியதில் ஊடகவியளார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் இ.மிதுன்சங்கர் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது, பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தியபோது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதியது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ள களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post