மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்படமாட்டாது!

மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்படமாட்டாது!

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்களை விநியோக்காமல் இருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

விருப்பு இலக்கங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (12) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் அந்த நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த பின்னர் விருப்பு இலக்கங்களை விநியோகிப்பது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post