சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை!

சனத் பூஜித
இந்த முறை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் வெளியிடும் உத்தியோகர்பூர்வ அறிவித்தல்களில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பரீட்சாத்திகள் உள்ளிட்ட அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு கல்வி சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் ஒரு சிலர் போலி செய்திகளை பரப்புவதை எண்ணி கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மேற்குறித்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post