
தாய்லாந்தின் வட பிராந்தியத்திலுள்ள நான் எனும் நகரைச் சேர்ந்த தின்னகோர்ன் ரத்தனப்பான் எனும் 32 வயதான இளைஞரே தனது வாடகை அறையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர் இரு தினங்களாக வேலைக்கும் செல்லாமல் எங்கும் தென்படாததை உணர்ந்த அவரின் நண்பர் ஒருவர் குறித்த அறைக்கு சென்று பார்த்தபோது, அவரது நண்பன், தின்னகோர்ன் படுக்கையில் கிடப்பதை ஜன்னலுக்கு ஊடாக கண்டார்.
அவரை எழவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தின்னகோர்னை பரிசோதித்த அதிகாரிகள் அவர் இரு தினங்களுக்கு முன்பே இறந்திருக்கக்கூடும் எனத் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்துள்ளார் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தின்னகோர்னின் குறித்து அவரின் நண்பர்கள் கூறுகையில், அவருக்கு எதிரிகள் எவருமில்லை. பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவர் எந்நேரமும் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.