திருடர்களால் ஒரு போதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது! -அசாத் சாலி

திருடர்கள் மாறி மாறி ஆட்சி செய்வது முடிவுக்கு வரும் வரையில் நாட்டை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"நாங்களும் திருடர்கள் நீங்களும் திருடர்கள் என கூறி இரு சாராரும் ஒன்றிணைந்துள்ளமையே தற்போதைய அரசியல் சூழலாகும்.

ஆகவே திருட்டு, துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் என்பவற்றை ஒழிக்க நாட்டில் ஒரு புதிய சக்தி உதயமாக வேண்டும். அவ்வாறு உதயமாகும் முன்னணியின் மூலம் இந்த இரு தரப்பினரையும் சிறையில் தள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுத் தேர்தலை நடத்த ஜூன் 20 திகதி முதல் 10 வாரங்கள் தேவை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதன்மூலம் புலப்படுவது என்னவென்றால் பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்பதே ஆகும்.’ என்றார்.
Previous Post Next Post