ஆகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்?

ஆகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்?

இலங்கையில் கோவிட்19 அச்சுறுத்தல் குறைந்துசெல்வதை அடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்குமாறு கோவிட் 19 பணிக்குழு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30 முதல் மே 26 வரையான காலப்பகுதியில் பொதுமக்களுக்கு மத்தியில் பூஜ்ஜிய வைரஸ் பரவல் காணப்பட்டதை காரணம் காட்டியே இவ்வாறு கோவிட்19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்  ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தகவல்படி, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் 19 நோயாளிகள் கடற்படை சிப்பாய்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கடைசி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post