இலங்கையில் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படும் கருத்துக்கள் வெளியிடப்பட்டமை தொடர்பின் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியது!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படும் கருத்துக்கள் வெளியிடப்பட்டமை தொடர்பின் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியது!

https://covid19.gov.lk/
இலங்கையில் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகை தொடர்பில் சில அரசாங்க அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலகம் முழுவதிலும் இனவாத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து குறித்து அறிக்கை ஒன்றை மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுகையை அடிப்படையாக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவுகையின் பிரதான காவிகளாக முஸ்லிம்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி அந்த சமூகம் மீது களங்கம் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடலை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வது குறித்து முகநூலில் பதிவிட்ட ரம்ஸீ ராசீக் என்பவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து முறைப்பாடு செய்ய சென்ற போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

-Tamilwin

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post