நாளை கத்தாரில் இருக்கும் இலங்கையர்கள் அழைத்துவர இருந்த விமானம் இடை நிறுத்தம்!

நாளை (27) கத்தாரில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வர இருந்த விமானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை சுமார் 273 கத்தார் வாழ் இலங்கையர்களை அழைத்து வர இருந்த விமானமே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.

அண்மையில் குவைத்தில் இருந்து இலங்கை வந்த சுமார் 100 பேருக்கு கொறோனா தொற்று இருந்தமை கண்டறியப்பட்டதன் விளைவாகவே இவ்வாறு குவைத் மற்றும் கத்தார் விமானங்கள் தற்காலிகமாக இடைனிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கத்தாரில் இதுவரை 1,051 இலங்கையர்கள் கொறோனா தொற்றுக்கு அங்கு இனம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post