சிறுவனை கட்டி வைத்த அடித்த பொலிஸார் - தர்கா நகர் (Video)

சிறுவனை கட்டி வைத்த அடித்த பொலிஸார் - தர்கா நகர் (Video)

அளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி வைத்து அடித்த சம்பவம் ஒன்று நேற்று முந்தைய தினம் (25) மாலை வேளையில் அம்பகஹ சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் அருகில் உள்ள CCTV ஒன்றில் பதிவாகியுள்ள அதேவேளை, பொலிசார் மாத்திரமன்றி அப்பகுதியில் ஆட்டோவில் சென்ற ஒருவரும் இறங்கி தாக்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து நேற்றைய முன்தினம் இரவு தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியிடம் பிரதேச மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் பதில் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொண்டு இது பற்றி முறையிட்டுள்ளார்.

இப்பின்னணியில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட ஏழைச் சிறுவனின் தந்தையை பொலிசார் அழைத்துச் சென்று விசாரணை நடாத்தியுள்ளதுடன் இம்முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்துள்ளனர்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post