அடுத்த மாதம் முதல் 5000 கொடுப்பனவு இல்லை! பிரதமர் திட்டவட்டம்!

அடுத்த மாதம் முதல் 5000 கொடுப்பனவு இல்லை! பிரதமர் திட்டவட்டம்!

ஜூன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபா வழங்கப்படமாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியான 5,000 ரூபாவை அடுத்த மாதத்திற்கு வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதோடு, அரசாங்கத்திற்கும் நிதி ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் ஜுன் மாதத்திற்கான 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படமாட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபா கொடுப்பனவானது, அரசியலை நோக்கமாக கொண்டு வழங்கப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகள் அனைவரையும் விலகிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post