இன்று முதல் இந்த பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு!

இன்று முதல் இந்த பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு!

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாலிகாகண்த வரையிலான பிரதான நீர் குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (30) நீர் வெட்டு விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்தது.

அதன்படி, கொழும்பு 02, 03, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய இடங்களில் இன்று (30) காலை 9 மணி தொடக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை 18 மணி நேர நீர் வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 01 பகுதிக்கு குறைந்த அழுத்த நிலைமைகளுடன் நீர் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post