கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக 5 பரிந்துரைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துதல், இவ்வாரம் முழுவதும் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தல், அரச மற்றும் தனியார்துறை சுகாதார சேவை ஊழியர்களுக்கு முறையான தொற்றுத்தடுப்பு பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளடங்கலாக உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 5 பரிந்துரைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (16) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்படி பரிந்துரைகளை உள்ளடக்கியிருப்பதுடன், அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் கோரியுள்ளது.

