நாடாளுமன்றை கலைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறக்க கூடாது! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றை கலைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறக்க கூடாது! -சஜித்

உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத சிலர், மார்ச் மாதம் 02ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டும் என்று நாடளாவிய ரீதியாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.

ஏப்ரல் புதுவருடத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியாத காரணத்தினால்தானா, இவ்வாறு அவசரப்படுகின்றீர்கள் என நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்.

ஆனால், உரிய நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதையும் நான் இவர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் செயற்பாட்டை நாம் என்றும் செய்யப்போவதில்லை.

நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்வரை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது.

நாம் யாருடனும்  ஒப்பந்தம் செய்துக் கொள்வதில்லை. எனவே, உரிய நேரத்தில் நாடாளுமன்றைக் கலைக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.