
கொழும்பு கோட்டை- பதுளை ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த விசேட ரயில் சேவை நடைபெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக இலக்கம் 01 ரயில் இந்த காலப்பகுதியில் இரவு 7.35மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.50மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோன்று இலக்கம் 02 ரயில் இரவு 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 5.27 மணியளவில் கொழும்பு கோட்டை நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

