
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.
அப்போது சாட்சியம் அளிக்கையில் அவர் மேற்படி கூறியுள்ளார்.
முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடிப்படைவாதத்தை வளர்த்தார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் குடும்பத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நெருங்கி பழகியதாகவும் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வைத்து இலங்கையின் பெளத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் சிலோன் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் அப்துல் ராசிக் இருப்பதை அந்நாட்டு பொலிஸார் விசாரணையில் உறுதி செய்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

