
நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவாப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள மாதா உருவச்சிலை ஒன்றுக்கு விசமிகள் சிலர் கல்லெறிந்து சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து இதற்கு நீதி வழங்குமாறு கோரி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.
அங்கு பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.


இனவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அனைத்து இன மக்களும் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வது கட்டாயமாகும்.