மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள், அச்சத்தில் மக்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள், அச்சத்தில் மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளை நிறத்தினாலான மர்மப்பொருள் வானில் பறப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட பல பிரதேசங்களிலேயே இன்று (18) இவ்வாறு வான்பரப்பில் மர்மப்பொருள் பறப்பதாகவும் இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை நிறத்தினாலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்மப்பொருள் வான்பரப்பில் பறப்பதோடு, சிலரது வீடுகள் மற்றும் மரங்களின் மேல் அவை காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்மப்பொருளை அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஞ்சுவகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்தபோது அவை மென்மையாக காணப்படுவதாகவும் குறித்த மர்மப்பொருளில் சிறு பூச்சி இனங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மர்மப்பொருளினை பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் கையில் எடுத்து அதனை சேகரித்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.