
மத்திய வங்கி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு விசேட மேல்நீதிமன்றில் கடந்த மாதம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.