
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னதாக 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட விலையை மீண்டும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.