
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை அறிவிப்பார் என்று உதய கம்மன்பில ஊடகங்களிடம் கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.