வாகனத்தைத் திருடி 900 KM ஓட்டிச் சென்ற சிறுவர்கள்; அதிரவைத்த திருட்டிற்கான காரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகனத்தைத் திருடி 900 KM ஓட்டிச் சென்ற சிறுவர்கள்; அதிரவைத்த திருட்டிற்கான காரணம்!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவை  சேர்ந்த 10 – 14 வயதுகளை உடைய நான்கு சிறார்கள், வாகனம் ஒன்றை திருடி சுமார் 900 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்துள்ளனர். மேலும், அவர்கள் பணம் மற்றும் மீன்வலை என்பவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த நான்கு பேரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடதக்கது.  அவர்களில் ஒருவர் தமது பெற்றோருக்கு தாம் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கடிதமும் எழுதி விட்டு சென்றுள்ளார்.

கடந்த வார ஆரம்பத்தில் குயின்ஸ்லாந்தில் தமது பயணத்தை ஆரம்பித்த அவர்கள், நியுசவுத் வேல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இடையில் அவர் ஒரு இடத்தில் பெற்றோலையும் களவாடியமை தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுயுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வழங்கியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.