
பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 60 பில்லியனுக்கும் அதிகம் எனவும், இது நாடு முழுவதிலும் அரசாங்கம் முன்னெடுக்கும் கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்படும் செலவுக்கு சமமானது எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹெட்டிப்பொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
சஹ்ரானின் தாக்குதலை சாதாரண நடவடிக்கையாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். 250 இற்கும் மேற்பட்டோர் இறந்தது பிரச்சினைக்குரியது அல்லவா? இந்தப் பிரச்சினைகளையும் சுமந்துகொண்டுதான் அரசாங்கத்துக்கு முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.