
இன்று காலை 10.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பாலசிங்கம் ஹரிதா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான இருவரின் சித்தப்பாவினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.