
இடையே தனிப்படட கோபதாபங்களை வைத்து முகப்புத்தக நேரலைகளில் மிக மோசமாக ஒரு சில அரசியல்வாதிகளை பேசியதும், கேவலமாக தூற்றுவதும் என பல மனித தவறுகளும் ஏட்பாட்டில் இருந்தது.
இப்படி எது நடந்தாலும், எந்த அரசியல் உள்நோக்கும் இல்லாமல் பங்குகொண்ட நம் ஊரின் பெண்கள், ஆண்கள், மாணவர்கள், சிறுமிகள், வயோதிபர்கள் என எல்லோரும் எதிர்ப்பார்த்த ஜனாதிபதியின் சந்திப்பு தவிடுபொடியாகி இருக்கிறது.
"ஜனாதிபதியை சந்திக்க 5 பேர் கொண்ட குழு செல்கிறது" என்ற சத்தம் கேட்டதும், நாம் சந்தோசப்பட்டோம், ஆனாலும் குழுவை ஏற்றிச்சென்ற நபர் அந்தக்குழுவை அந்தரத்தில் விட்டு விட்டு கொழும்பு நோக்கி சென்றிருக்கிறார்.

ஜனாதிபதி புத்தளம் மாவட்ட மைதானத்தையும் திறந்துவைக்கவும் வரவில்லை, இரவு கதைப்போம் என்று வொய்ஸ் கட் கொடுத்த நகர தலைவர் கலந்துரையாட சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை. கதைப்போம் என்று சொன்னவர்களும் கதைக்க முடியாமல் போனது, கதைக்கப்போகிறோம் என்று சென்றவர்களுக்கு கதைக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி தற்போது இந்த போராட்டம் போலிஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி "நாளைய தக்பீர் அல்லாஹு அக்பர்" என்ற முழக்கத்தோடு திசை மாறுகிறது. சிறந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அது ஜும்மாவின் பின்னால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

(புத்தளம் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய போது)