எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவை வழங்க முஸ்லிம் காங்கிரஸின் கட்சி (SLMC), ஞாயிற்றுக்கிழமை (04) தீர்மானித்துள்ளது.
கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பீடம், கூடியது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், “சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது” என்றார்.