கம்பளை பாடசாலை மைதானத்தில் வெடிப்பு சம்பவம்; 3 மாணவர்கள் பாதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளை பாடசாலை மைதானத்தில் வெடிப்பு சம்பவம்; 3 மாணவர்கள் பாதிப்பு!


கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர கலைமகள் தமிழ் வித்தியாலய பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், மற்றையவர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றார். அனுப்பப்பட்ட நிலையில், தரம் 6 இல் பயிலும் 11 வயதான மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார்.


பாடசாலை நேரத்தில், மேற்படி  மூன்று மாணவர்களும் வெளியே வந்துள்ளார். அப்போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது. அதனை ஒருவர் உதைத்தைப்போதே அது திடீரென வெடித்துள்ளது. 


உதைத்த மாணவனின் பாதணி சேதமடைந்துள்ளது. அந்தக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது,  .


விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்து வெடிபொருள் ஒன்றே வெடித்து சிதறியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகிறார்.


இச்சம்பவம் இடம்பெற்று 1:35 மணியளவில் பாடசாலையினால் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம், குறித்த இடத்திற்கு சென்ற போது பாடசாலையில் கரும் புகை சூழ்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.


இது குறித்து பாடசாலை அதிபர் கணேசன் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, ​​வெடி விபத்து குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என பொலிஸார் கூறியதாக கூறினார்.


இது தொடர்பாக கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் நிஹால் அழககோனிடம் வினவ முயன்றபோதும் முயற்சி பயனளிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.