சிறையில் இருக்கும் மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறையில் இருக்கும் மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய் கைது!


களுத்துறை சிறைச்சாலையில் கைதியாகவுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை - விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மகனைப் பார்ப்பதற்காக குறித்த தாய் காற்சட்டையொன்றை எடுத்துவந்துள்ளார்.


இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.