தேங்காய் திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை!


1,200 ரூபாய் பெறுமதியான 20 தேங்காய்களை திருடிய ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூ​ழிய வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டை விதித்துள்ளது.


திவுலபிட்டிய, கெஹேல்​எல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்தே 20 தேங்காங்களை அந்நபர் திருடியுள்ளார்.


தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தேங்காய்களை பறித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டன. அதில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட மேற்படி நபரை  இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை மினுவாங்கொட நீதவான்   விதித்துள்ளார்.


குற்றஞ்சாட்டப்பட்டவர் அந்தக் குற்றங்களை தான் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். எனினும், கைவிரல் அடையாளங்களின் பிரகாரம் அவ​ர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதனப்படையிலேயே ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


 குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட திவுலுப்பிட்டியவைச் சேர்ந்த அந்த நபர், 2021 ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.