நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக வெளியான அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக வெளியான அறிவிப்பு!!


எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.


இந்நிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


அதன்படி, போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முறையத்தின் தலைவர் எம். யூ. மொஹமட் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


தற்போது, ​​6,600 லீற்றர் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பை கொண்ட 300 தாங்கி ஊர்திகள் வழக்கமான எரிபொருள் விநியோகத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென எம். யூ. மொஹமட் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.