நிர்வாண புகைப்படங்களை கணவருக்கு அனுப்புவதாக மிரட்டி 26 லட்சம் பெற்ற சந்தேகநபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிர்வாண புகைப்படங்களை கணவருக்கு அனுப்புவதாக மிரட்டி 26 லட்சம் பெற்ற சந்தேகநபர்!


திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உத்தியோகத்தர் ஒருவரின் நிர்வாணப்படங்களை, அவரது கணவரின் கைத்தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பல்வேறு கட்டங்களில் 26 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை பெற்ற சந்தேகநபரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


முறைப்பாட்டாளரான அரச உத்தியோகத்தர், குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் முறைசாரா உறவைப் பேணி வந்துள்ளதாகவும், அதன்போது, அந்த அரச உத்தியோகத்தரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


2019 ஆம் ஆண்டிலிருந்து, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில், பணத்தொகையை அவர் வழங்கிய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு அரச உத்தியோகத்தரை மிரட்டியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


இந்தநிலையில், சம்பவம் குறித்து சிறிபுர காவல்நிலையத்தில் அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துசெய்தார்.


அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.