உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!!

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் வெளியிட்டுள்ள பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த பணவீக்க தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது.

ஹான்கேவின் கணிப்புகளின்படி, சில மாதங்களுக்கு முன்னர் உயர் பணவீக்கம் உள்ள முதல் 05 நாடுகளுக்குள் இலங்கையும் இடம்பெற்றிருந்தது.

கடந்த வருடம் ஜூன் மாத்தில் குறித்த தரப்படுத்தலில், உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

எவ்வாறாயினும், நாட்டில் பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இலங்கை குறித்த தர வரிசையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளிடப்பட்ட இலங்கையின் நவம்பர் மாத்துக்கான பணவீக்கம் 61 சதவீதமாக பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், அண்மையில் தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் ஜனவரி மாதத்துக்கான பணவீக்கம் 54.2 சதவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.