இன்றைய வானிலை பற்றிய எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய வானிலை பற்றிய எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் நேற்றுஇரவுவடஅகலாங்கு 8.40 N இற்கும்கிழக்குநெடுங்கோடு 82.90 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு கிழக்காக 180 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.

அதுமேற்கு - தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்று 2023 பெப்ரவரி 01ஆம் திகதி காலை இலங்கையின் கரையை அடையக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வான காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவானமிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு,வடமத்திய, கிழக்கு,வடமேல் மற்றும் மத்திய  மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

-வளிமண்டலவியல் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.