இரு ராஜப‌க்சக்கள் உட்பட நால்வருக்கு தடை விதித்த கனடிய அரசு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு ராஜப‌க்சக்கள் உட்பட நால்வருக்கு தடை விதித்த கனடிய அரசு!!!

கடந்த 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு இன்று (10) அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.