புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய நடத்துனர் அற்ற பேருந்துகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய நடத்துனர் அற்ற பேருந்துகள்!


பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய முறைமையின் கீழ் நடத்துநர் அல்லது வாகன உதவியாளர் இன்றி பயணிகளிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய பயணச்சீட்டு இயந்திரங்கள் பேருந்துகளில் பொறுத்தப்படும். நடத்துனர் இன்றி அல்லது நடத்துனருடன் பேருந்துகள் பயணத்தை மேற்கொள்ள முடியும். எனினும் நடத்துனர்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். குறித்த இயந்திரங்களில் கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.


இதனை விரைவில் அறிமுகப்படுத்துவதற்காக முழுமையாக தரவுகள் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.