இரு தினங்களில் நாடு திரும்புகிறார் கோட்டா??
advertise here on top
advertise here on top

இரு தினங்களில் நாடு திரும்புகிறார் கோட்டா??

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை (03) நாடு திரும்ப உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜூன் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்திருந்தனர்.

இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை மீளவும் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.