வேலை செய்யாத அரச பணியாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலை செய்யாத அரச பணியாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை!


எவருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


வேலைச் செய்வதாயின் வேலை செய்யவும், முடியா​து என்றால் வீட்டுக்குச் செல்லவும் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச பணியாளர்களுக்கு இலவசமாக சம்பளம் கொடுப்பதற்கு தாம் தயாரில்லை என்றார்.


“எவருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது, ​ஏதாவது செய்ய வேண்டும்.  எனக்கும் இலவசமாக சாப்பிட முடியாது. இந்த நாட்டை நான் அபிவிருத்தி செய்யவில்லை என்றால், நானும் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஆகையால், நாங்களே முதலில் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.


ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு நான் யாரையும் அழைக்கவில்லை. எனினும், நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு சகலருக்கும் நான் அழைப்பு விடுகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.