![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguGNTQdiJQLVHxwRF6eHrUtzavWahDvuZy9ILaCTBVxgLwm1YMkDP3t5oruN7WTaFIiF96i_cETUnQJKdrzzExhw_fMLfAxeZjPK-aIGqIbxvS5A_uKEo8PuwsJFBDaq2KBEwxiK0UBRh65PQZMttbZeqN5av5YOkEG0FpgVqpbS-qGrJgzNEYoIXgIg/s16000/79F52062-60EF-407F-93BC-0CEF0F810A26.jpeg)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டிருந்தன.
எனினும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
பல்வேறு செய்திகளுக்கு மத்தியிலும் அவர் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். (யாழ் நியூஸ்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg49lnyQse6zWByDye-iEVcf94KZHbRRFI-lDFq8Lqp1uc3JtdnyS3Cek9Dp1YqlLk-vi5unkNaxWddPsR5q-5iq9phovcsQ7oROSs2LVk0y-WKNOFDxKFtbeVCDkqEQG-1GBNqWqF9dPXeYONNOgZTawlKcmCI2RQMi-dUn2JrXX-inFBkNmS6D-CZCw/s16000/32A66E69-A891-43F6-8D85-7702453E7A12.jpeg)