நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை மணிநேர மின்வெட்டு!
advertise here on top
advertise here on top

நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை மணிநேர மின்வெட்டு!


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (29) நாடளாவிய ரீதியில் 7 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை 5 மணி நேரமும் மாலை 6.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.