இனி துஷ்மந்த சமீரவுக்கு டெஸ்ட் போட்டிகள் கிடையாதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி துஷ்மந்த சமீரவுக்கு டெஸ்ட் போட்டிகள் கிடையாதா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.

கணுக்கால் உபாதை காரணமாக சமீரவின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்கான இலங்கை கிரிக்கெட் (SLC) மருத்துவ குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துஷ்மந்த சமீர இந்த ஆண்டின் பிற்பகுதியில் T20 உலகக் கோப்பை வரை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சுரங்க லக்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதால், சமீரவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்குவது இலங்கைக்கு மிகப்பெரிய இழப்பாகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.