க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு!


2021ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile App 'Exams) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரச பாடசாலை மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டவுடன், அதன் நகலைப் பெற்று, தேவைப்படும்போது சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரரின் பாதுகாப்பில் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.