செயற்திறனை இழந்த பிரபல கொரோனா தடுப்பூசிகள்! அமெரிக்க ஆய்வில் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செயற்திறனை இழந்த பிரபல கொரோனா தடுப்பூசிகள்! அமெரிக்க ஆய்வில் வெளியான தகவல்!


உலகம் முழுவதும் ​கொவிட் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த அமெரிக்க ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி உலகப் புகழ்பெற்ற பத்திரிகையான 'சைன்ஸ்' விசேட வௌிப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.


ஃபைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி சோதனையில் கிட்டத்தட்ட 800,000 அமெரிக்கர்கள் பங்கேற்றுள்ளனர்.


பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரையிலான ஆறு மாதங்களில் கொவிட் தடுப்பூசியைப் பெற்ற மக்களின் உடலினுள் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கவனம செலுத்தப்பட்டது.


அதன்படி, மார்ச் மாத தொடக்கத்தில் 86.9% ஆக இருந்த ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 43% ஆகக் குறைந்துள்ளது.


89% ஆக இருந்த மொடர்னா தடுப்பூசியின் செயல்திறன் ஆறு மாதங்களுக்குப் பிறகு 58% ஆகக் குறைந்துள்ளது.


ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி செயல்திறன் 86.4% இல் இருந்து 13% ஆக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


வைரஸுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளின் செயல்திறன் 89% இலிருந்து 13% ஆகக் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கையில் தெரியவந்துள்ளது.


ENGLISH REF: https://www.webmd.com/vaccines/covid-19-vaccine/news/20211105/covid-vaccine-protection-drops-study


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.