நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இனம்காணப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு!

நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இனம்காணப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு!


கொரோனா வைரஸ் தொற்றாளர்களுள் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.


கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயாகும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.


முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.