வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நிலையங்கள் திறக்க முடிவு! தபால் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நிலையங்கள் திறக்க முடிவு! தபால் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கை!


தபால் சேவைகள் இ​டம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தபால் மா அதிபர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்தார்.


தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பணி நிமித்தம் அலுவலகங்களை திறக்க கடந்த தினம் தீர்மானிக்கப்பட்டது.


இருப்பினும், கடுமையான போக்குவரத்து சிரமங்கள் இருப்பதால், அந்த நிலையை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.


அதன்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை மூடவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காலப்பகுதியில், ​​சுமார் 500 ஊழியர்கள் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதன் விளைவாக சுமார் 50 அலுவலகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.


முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.