சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை கொரோனா பரிசோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை கொரோனா பரிசோதனை!


சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் (06) கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதன்போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.


இதற்கமைய, நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு சுகாதார பிரிவினரால் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.