கடவுச்சீட்டு பெற இருப்போருக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு பெற இருப்போருக்கான அறிவித்தல்!


பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்ககு மாத்திரம் வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்து அத்திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் அதிகாரிகள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைந்தளவான பணியாளர்களைக் கொண்டு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, கட்டாய தேவை உள்ளவர்களுக்கு மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.