கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட LTTE அமைப்பை ஊக்குவித்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட LTTE அமைப்பை ஊக்குவித்த நபர் கைது!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.